திருக்கோவிலூரில் பொன்முடிக்கு அமோக வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வெற்றி வாய்ப்புள்ள நிலை உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் க. பொன்முடி இந்த முறை திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கு காரணம் விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதனால் பொன்முடி வெற்றிக்கு மிக கடுமையான நெருக்கடி இருக்கும் என்பதாலே அவர் தொகுதி மாறியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்குள்தான் இவரது சொந்த ஊர் வருகிறது என்பதும் இவர் தொகுதி மாறி வர முக்கியக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது.
அதன்படி நேற்று வெளியான வடக்கு மண்டலத்திற்குட்பட்ட திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது அந்த கருத்துக்கணிப்பு. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்த பொன்முடி சமீபத்தில் விடுதலையானர்.
நியூஸ் 7 மற்றும் தினமலர் கருத்துக்கணிப்பின்படி,இந்த தொகுதியில் திமுகவுக்கு 47.7 சதவீத ஆதரவு காணப்படுவதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதிமுகவுக்கு 27.7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம் பாமகவுக்கு 11.5 சதவீத ஆதரவு உள்ளது. ம.ந.கூட்டணிக்கு 6.2 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இக்கட்சிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications