ஜெ. கொலை செய்யப்பட்டார் என்பது ஆதாரமற்ற பொய்- பொதுச்செயலருக்கு யாரும் போட்டியில்லை- பொன்னையன்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்பது ஆதாரமற்ற பொய்ச்செய்தி என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்று அவரது தீவிர விசுவாசியாக வெளிப்படுத்திக் கொண்ட கராத்தே வீரர் ஹூசைனி பகீர் புகார் தெரிவித்திருந்தார். அத்துடன் மன்னார்குடி கோஷ்டிதான் இக்கொலைக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பொன்னையன் அளித்த பதில்:
ஜெயலலிதா மரணம் தொடர்பான இதுபோன்ற தகவல்கள் ஆதாரமற்ற அடிப்படையற்ற பொய்ச்செய்தியாகும். ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அப்பல்லோ மருத்துவமனையுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு 15 பேர் கொண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஜெயலலிதாவுக்கு லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர். நுரையீரல் தொற்று, காய்ச்சலுடன்தான் ஜெயலலிதா அரசுப் பணிகளை 17 நாட்கள் மேற்கொண்டார்.
அதன்பின்னர்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை உருவானது.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
மேலும் நாளை கூடும் அதிமுக பொதுக்குழுவில் இதுவரை யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதரவில்லை. அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலர் தேர்வு நடைபெறும். எம்ஜிஆர் காலத்தில் பின்பற்ற நடைமுறைகளின் அடிப்படையில் தேர்வு இருக்கும். சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கால் பொதுக்குழுவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் பொன்னையன் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications