ஓ.பி.எஸ்.ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்!
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்னையன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை மிக தீவிரமாக ஆதரித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான சி. பொன்னையன் தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவர் பொன்னையன். ஜெயலலிதா அதிமுக செய்தித் தொடர்பாளராக பொன்னையனை நியமித்திருந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது செய்தியாளர்களிடம் அதிகமாக பேசியவர் பொன்னையன். ஜெயலலிதா திடீரென மறைந்த போது ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார் பொன்னையன்.

சர்ச்சை பொன்னையன்
பின்னர் சசிகலாவை படுதீவிரமாக ஆதரித்து குரல் கொடுத்தவர் பொன்னையன். அதுவும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா என ஸ்ரீராம் சிட்பண்ட் நாமினி பேப்பரை காட்டியும் சர்ச்சையில் சிக்கியவர் பொன்னையன்.

அவைத் தலைவர்
இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதன் திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தந்தார். இதனால் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவால் மதுசூதனன் நீக்கப்பட்டார்.

அதிருப்தி
புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையனை நியமித்திருந்தார் சசிகலா. அதிமுக அவைத் தலைவர் பதவி தமக்கு கிடைக்கும் என காத்திருந்த பொன்னையனுக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவு
இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவிக்க பொன்னையன் முடிவு செய்துள்ளதாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் முதலில் பதிவு செய்தது. தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பொன்னையன் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தம்முடைய ஆதரவை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications