போர்சே கார் விபத்து: குடிகார கார் ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்துக்கு நிபந்தனை ஜாமீன் !
குடிபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கார் பந்த வீரர் விகாஸ் ஆனத்துக்கு ஆனந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
சென்னை: குடி போதையில் போர்சே காரை ஓட்டி ஆட்டோ டிரைவரின் உயிரை பறித்த கார் ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கியது.
சென்னை கத்தீட்ரல் சாலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிவேகமாக வந்த போர்சே கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்தக் கோர விபத்தில் ஆட்டோக்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த டிரைவர்களும் படுகாயமடைந்தனர். டிரைவர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 11பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் பந்தய வீரர் விகாஷ் ஆனந்த், சரண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் விகாஸ் ஆனந்த் மற்றும் சரண் குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விகாஸ் ஆனந்த் மற்றும் சரண் குமார் ஆகியோருப்பு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையாக 27 லட்சம் ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் விபத்தில் சேதமடைந்த 10 ஆட்டோக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை நவ.11ம் தேதிக்குள் செலுத்தவேண்டும். முதற்கட்டமாக ஏழரை லட்சம் ரூபாயை செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நிபந்தனை விதித்தது.
மேலும் விகாஷ் மாலை 05.30 மணிக்கு தினமும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவும்; மேலும் காரின் உரிமையாளரான சரண் குமார் தினமும் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தால் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications