''டோன்ட் வொர்ரி''... திமுக தலைமையை கூர் பார்த்த அழகிரி போஸ்டர்கள்.. !
சென்னை: மு.க.அழகிரியைய கட்சியை விட்டு நீக்கியதில் அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் அவ்வப்போது ஒட்டி வந்த சர்ச்சை போஸ்டர்களுக்கும் முக்கிய இடம் உண்டு.
அதிலும் சமீப காலமாக அவர்கள் ஒட்டிய சில பரபரப்பு போஸ்டர்கள்தான் கட்சி் தலைமையை கொந்தளிக்க வைத்து விட்டது.
அவர்கள் போஸ்டர் அடிக்கப் போக, அது அழகிரிக்கே எதிராக திரும்பியது சோகம்தான்.

போஸ்டர் பாய்ஸ்...
மதுரையில் போஸ்டர்களுக்கு பிரபலமானவர்கள் அழகிரி ஆதரவாளர்கள். எந்த போஸ்டராக இருந்தாலும் அதில் இடம் பெறும் வாசகம் ரொம்பப் பிரபலம். எப்படித்தான் இப்படி யோசிப்பார்களோ என்று வியக்கும் அளவுக்கு உண்மையிலேயே சிலாகிக்க வைப்பார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

அண்ணன் வர்றார்லே...
அதேபோல இனிமேல் அழகிரி சென்னையிலிருந்து செயல்படப் போகிறார் என்று முன்பு பேச்சு அடிபட்டபோது, சென்னைக்கும் வந்து அண்ணன் வர்றார்லே என்று போஸ்டர் ஒட்டி கிலியேற்படுத்தினர் மதுரை அழகிரி ஆதரவாளர்கள் என்பது நினைவிருக்கலாம்.

ஆப்பு வைத்த போஸ்டர்கள்
ஆனால் எந்த போஸ்டர்கள் அழகிரிக்கு புதிய அந்தஸ்தைக் கொடுத்ததோ அதே போஸ்டர்கள்தான் இன்று அழகிரிக்கு ஆப்பு வைத்து விட்டன.

ஒரே நேரத்தில் எப்படி இரண்டு எஜமானர்களுடன்
அதில் ஒரு போஸ்டர்தான் - ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம், ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது என்ற போஸ்டர்.

தென்னகத்து எஜமானே
அதில் ஒரு போஸ்டர்தான் - ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம், ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது என்ற போஸ்டர்.

டோன்ட் வொர்ரி
சமீபத்தில் அழகிரி ஆதரவாளர்கள் ஐந்து பேரை கட்சி நீக்கியதைத் தொடர்ந்து மறுபடியும் ஒரு போஸ்டரை டவுன்ஹால் ரோடு பக்கம் போய் அடித்துக் கொண்டு வந்து ஒட்டினர். அதில் இடம் பெற்ற வாசகம்தான் செம குசும்புத்தனமானது.. டோன்ட் வொர்ரி.. இதுதான் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்த வாசகம். இதைப் பார்த்து சிலாகிக்காத, சிரிக்காத மதுரை மக்களே இல்லை.

சும்மா இருங்கலே...
இதனால் அழகிரியே கூட டென்ஷனாகி விட்டார். இனிமேல் போஸ்டர் அடிக்கும் வேலையெல்லாம் கூடாது என்று எச்சரித்தார் தனது ஆதரவாளர்களை. ஆனாலும் அவர்கள் நின்றபாடில்லை.

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா...
மாணிக்கம் என்ற திமுக கவுன்சிலர், அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி தைப் பொங்கலுக்கு போஸ்டர் ஒட்டினார். அதில், கோழி மிதித்து குஞ்சு சாகுமா? என்ற வாசகத்தை கொட்டை எழுத்துக்களில் கோழி, குஞ்சுகளோடு இருக்கும் படத்தைப் போட்டிருந்தார். அதில் அழகிரி படம் இல்லை. ஆனால் கருணாநிதி, அன்பழகன் உள்ளி்டடோரின் படங்களைப் போட்டு வைத்திருந்தார்.

மேலும் டென்ஷனான ஸ்டாலின்
இந்த போஸ்டர் மு.க.ஸ்டாலினை மேலும் டென்ஷனாக்கி விட்டதாக தெரிகிறது. இப்படி போஸ்டர்கள் மூலம் தொடர்ந்து அழகிரி ஆதரவாளர்கள் டென்ஷன்படுத்தி வந்ததால்தான் அவர் அழகிரிக்கு எதிராக தீவிரமாக இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

நீக்கத்திற்கு என்ன போஸ்டர் போடப் போறாங்களே...
தற்போது அழகிரி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கும் ஏதாவது போஸ்டர்கள் ஒட்டுவார்களா என்று தெரியவில்லை... ஒட்டினாலும் ஒட்டலாம்.. யார் கண்டார்கள்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications