For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தீர்ப்பு எதிரொலி.. பல இடங்களில் கட் ஆன கரண்ட், டிவி ஒளிபரப்பு

Google Oneindia Tamil News

மதுரை: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மின்வெட்டும், கேபிள் டிவி ஒளிபரப்பு ரத்தானதும் நடந்து மக்களை மேலும் பரபரப்பில் ஆழ்த்தியது.

பல பகுதிளில் அரசு கேபிளும் கூட கட்டானது. தனியார் கேபிள்களிலும் கூட சானல்கள் தெரியவில்லை. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது.

jaya

சேலம் ,கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மின்வெட்டு காணப்பட்டது. பல பகுதிகளில் அரசு கேபிள் ஒளிபரப்பு இல்லை. டிவிகளில் சானல்கள் எதுவும் தெரியாத நிலை ஏற்பட்டது.

இவை அனைத்தும் பெங்களூர் கோர்ட்டில் உள்ள ஜெயலலிதாவின் வக்கீல் திவாகர், தீர்ப்பு தள்ளிப் போவதாக கூறிய பின்னர் நடந்ததாகும். தற்போது தீர்ப்பு வெளியாகி விட்டது. சானல்களும் தெரிய ஆரம்பித்து விட்டன.

English summary
Power supply and Arasu cable channels have gone off in many parts of TN after Jaya's lawyer informed that the judgement in DA case is being slated by 1 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X