மீண்டும் திரும்புகிறதா மின்வெட்டு.. நெல்லையில் மக்கள் குழப்பம்

நெல்லை மாவட்டத்தில் தீபாவளியன்று முழு மின்சாரம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 3 தினங்கள் மழை பெய்ததால் மின் நுகர்வு குறைவாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் மின்தடை ஏற்பட தொடங்கியுள்ளது.
வழக்கமாக கோடை காலங்களான மார்ச், ஏப்ரல் மே மாதங்களில் வெயில் வாட்டி எடுக்கும். வெளியே தலை காட்டவே முடியாத அளவுக்கு உஷ்ணம் இருப்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள்.
இதனால் மின் விசிறி, ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும். இந்த காரணங்களால் மின் பற்றாக்குறை ஏற்படும். அப்போது மின்தடை ஏற்படுவது வழக்கம். காலையில் 3 மணி நேரம் மட்டும் மின்தடை செய்யப்படும். மின் பற்றாக்குறை அதிகரிக்க அதிகரிக்க மின் வெட்டும் அதிகரிக்கும். இதனால் ஒவ்வொரு பகுதிக்கும் சுழற்சி முறையில் மின்சாரம் வழங்கப்படும்.
ஆனால் நேற்று தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. பகல் 12 மணிக்கு ஏற்பட்ட மின்தடை பகல் 1 மணிக்கு தான் வந்தது. அதே போல் மாலை 6 மணிக்கு போன மின்சாரம் சரியாக 7 மணிக்கு வந்தது. மின்னர் 7.30 மீண்டும் கட்டானது. அடுத்த கால் மணி நேரத்தில் மீண்டும் வந்தது.
இது மீண்டும் அதிகரிக்குமா அல்லது இது தற்காலிகமா என்று தெரியவில்லை. தற்போது பகல் வேளையில் வெயிலும், இரவு வேளையிலும் குளிரும் காணப்படுகிறது. இதனால் இரவில் மின் நுகர்வு குறைவாக உள்ளது. ஆனால் பகல் பொழுது வெயில் அடிப்பதால் மின் நுகர்வு அதிகமாக உள்ளது.
மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நிலை எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் மின் தடை ஏற்படுவது கேள்விகுறியாகவே உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications