கோவை, திருப்பூர்... மீண்டும் திரும்பியது மின்வெட்டு
கோவை: தமிழகத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் மின் வெட்டு திரும்பியுள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முறை வைத்து 6 மணி நேர அளவுக்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர்.
ஏற்கனவே நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மின்வெட்டு அமலாவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொழில் மாவட்டங்களான கோவை, திருப்பூரில் 6 மணி நேர மின் தடை அமல்படுத்தப்பபடுவதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

விசைத்தறிக் கூடங்கள் பாதிப்பு
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்லடம், சோமனூர், பள்ளபாளையம், தெக்கலூர், அவிநாசி, கருமத்தம்பட்டி, சூலூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன.

5 லட்சம் தொழிலாளர்கள்
இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தினசரி 60 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது.

காலையில் 3 மணி நேரம்
கடந்த 9ம் தேதி முதல் கோவை புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டப்பகுதிகளில் தினசரி காலை 3 மணி நேரம், பகலில் 2 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் என ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மீண்டும் மின்வெட்டு ஏற்படுகிறது.

உற்பத்தி பாதிப்பு
இதனால், ஜவுளி துணி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு குறைந்துவிட்டது. உற்பத்தியாளர்களுக்கு 20 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கூலி குறைந்தது
விசைத்தறி தொழிலாளர்களுக்கும், விசைத்தறியாளர்களுக்கும் அவர்கள் உற்பத்தி செய்யும் துணியை மீட்டர் கணக்கில் அளந்து கூலி கணக்கிடப்படுவதால், அவர்களுக்கு கூலி குறைந்துள்ளது.ஏற்கனவே, விசைத்தறிகளுக்கு மின்மீட்டர் பொருத்துவதால் மின் கட்டண உயர்வு மற்றும் நூல் விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில் நசியும்
தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள மின் தடையால் இத்தொழில் மேலும் நலிவடையும் என விசைத்தறியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications