அனல் பறக்கும் மின்வெட்டு... மக்கள் பெரும் அவதி
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரம் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்தடை தளர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஒருவாரமாக அதிகளவில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், அதன் பின்னர் இரவிலும் என 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. 10 மணி நேர மின்தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்உற்பத்தி சரிந்ததால் மின்பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சமாளிக்கவே மின்லோடு செய்யப்படுவதாகவும் மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த மின்தடையால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுவதால் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து தொழில்களுமே முடக்கம் அடைந்துள்ளன.
இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்வெட்டு அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே மின்வெட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications