மின் திட்டங்கள் பற்றி அரசு எனக்கு தான் பதில் அளிக்கவில்லை, ராமதாஸுக்காவது பதில் கூறுமா?: கருணாநிதி
சென்னை: மின் திட்டங்கள் குறித்து தமிழக அரசு என் கேள்விகளுக்கு பதில் அளிக்காவிட்டாலும் பாமக நிறுவனர் ராமதாஸின் கேள்விகளுக்காவது பதில் அளிக்குமா என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கேள்வி-பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி:- மின்சாரம் பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும் - செம்மொழி பற்றி தாங்கள் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்களே?.

பதில்:- அதிலிருந்தே நான் கூறியதும், டாக்டர் ராமதாஸ் கூறியதும் உண்மை என்று புரியவில்லையா?. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வரே பதில் சொல்லியிருப்பாரே?. உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான், தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், 2 அமைச்சர்களைப் பிடித்துப் பதில் சொல்ல வைத்திருக்கிறார். எது உண்மை என்பதை மக்களே அறிவார்கள்.
மின்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தித் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா முடுக்கி விட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியைத் தொடங்கி 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.
இதிலிருந்தே, தற்போது கூடுதலாகக் கிடைக்கும் 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். திமுக ஆட்சியில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்படாவிட்டால் இந்த 2,500 மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்தே இருக்காது. அதற்காக திமுக ஆட்சிக்கு நன்றி கூற வேண்டியவர்கள், இந்த ஆட்சியினர். முதல்வர் அறிக்கையிலும், துறையின் அமைச்சர் அறிக்கையிலும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, அதுவும் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த அளவுக்கு மின்சாரம் வாங்கும்போது, டெண்டர் கோரப்பட்டதா? என்ன விலை?. அதுவும் ஒரே நேரத்தில் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டதன் மர்மம் என்ன?. 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டால், அதுவரை தமிழக அரசின் சார்பில் மின் உற்பத்தித் திட்டங்களே தொடங்க மாட்டார்களா?. இது பற்றிய விவரங்களை மீண்டும் மீண்டும் கேட்டு இந்த அரசினர் அதற்கு மட்டும் பதிலளிப்பதில்லையே; என்ன காரணம்?. இனியாவது பதிலளிப்பார்களா?. எனக்குப் பதிலளிக்க விரும்பாவிட்டாலும், பாமக நிறுவனர், அமைச்சரின் அறிக்கைக்குப் பதிலாக 10 கேள்விகளை விவரமாகக் கேட்டிருக்கிறார். அதற்காவது அரசினர் பதில் அளிப்பார்களா?.
கேள்வி:- எப்படியோ இந்த அதிமுக ஆட்சியில் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு புதிய தலைவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுவிட்டாரே?.
பதில்:- திமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவராக நியமனம் பெற்ற கபிலன், கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற பிறகு, 2½ ஆண்டு காலமாக அந்தப் பதவியிலே யாரும் நியமிக்கப்படவில்லை. 2½ ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மின் தொடரமைப்பு கழக இயக்குனராக இருந்த அக்ஷய் குமாரை அரசு நியமித்துள்ளது. நியமிக்கப்பட்ட நிலையில் புதிய தலைவரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படுவதாலும், பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டுமென்பதாலும், நீதித்துறையை சேர்ந்தவர் தான் இந்த பதவியிலே நியமிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்திலே தொழில் துறையினர் முறையிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒழுங்கு முறை ஆணைய புதிய தலைவராக எஸ்.அக்ஷய் குமார் அமைச்சர் முன்னிலையில் பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற மறுநாளே, அவருடைய நியமனத்திற்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications