அப்பவே பிரவீன் நாயரால ஒன்னும் செய்ய முடியல.. இப்போ மட்டும் என்ன செய்ய போறாரு?
ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதி என்றாலே சர்ச்சை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. ஜெயலலிதா மறைந்தது முதலே தமிழக அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது ஆர்கே நகர் தொகுதி.
தமிழக அரசியலில் ஜெயலலிதாவுக்கு பிறகு தாங்கள்தான் என காட்டிக்கொள்ள எப்படியாவது ஆர்கே நகரை கைப்பற்றியாக வேண்டும் என்ற நோக்கத்தில் வரிந்துகட்டி செயல்பட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.

எதிர்க்கட்சிகள் புகார்
கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க பணம் கொழிக்க ஆரம்பித்தது ஆர்கே நகரில். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் வரிசையாய் புகார் அளித்தன.

ரத்தான இடைத்தேர்தல்
அதிரடியாய் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டிலும் தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கொத்தாக சிக்கின. இதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதே பிரவீன் நாயர்தான்
அப்போது ஆர்கே நகர் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இதே பிரவீன் நாயர்தான். அப்போதே அவரால் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியால் இடைத்தேர்தல் ரத்தானது.

என்ன செய்துவிட போகிறார்?
இந்நிலையில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை சுமந்து வந்த வேலுச்சாமிக்கு பதில் தற்போது பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது ஒன்றும் செய்ய முடியாமல் திணறிய பிரவீன் நாயர் இப்போது மட்டும் என்ன செய்துவிட போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை
தொகுதி உறுப்பினர் மறைந்து 6 மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் ஓராண்டுக்குப் பின்னர் வரும் 21ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இம்முறையும் விஷால் தீபாவின் வேட்பு மனு நிராகரிப்பு, சுயேச்சைகளை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்படுவது, ஒதுக்கப்பட்ட சின்னங்களை பரிசாக கொடுப்பது என சர்ச்சைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் நெருங்குகிறது தேர்தல் தேதி.

மக்கள் சந்தேகம்
இதேநிலை நீடித்தால் தேர்தல் அதிகாரிகள் மாற்றப்படுவது மட்டுமில்லை, தேர்தலே ரத்து செய்யப்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இந்த ஆண்டாவது ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம்டைந்துள்ளனர் ஆர்கே நகர் தொகுதி மக்கள்.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications