எம்.ஜி.ஆர் பேச்சைக் குத்திக் காட்டி விஜயகாந்த்தை உயர்த்திப் பேசும் பிரேமலதா!
தஞ்சாவர்: எம்.ஜி.ஆருக்குக் குண்டடி பட்டதும் அவர் புரிவது போலவா பேசினார். அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகவில்லையா. அதேபோலத்தான் விஜயகாந்த்தும் புரியாமல் பேசினாலும் கூட பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக உள்ளார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த கையோடு ஊர் ஊராகப் பிரசாரம் செய்து வருகிறார் பிரேமலதா விஜயகாந்த். நேற்று தஞ்சாவூரில் அவர் பிரசாரம் செய்து பேசினார்.
அவரது பேச்சின்போது எம்.ஜி.ஆரின் பேச்சையும், விஜயகாந்த் பேச்சையும் ஒப்பிட்டுப் பேசினார். எம்.ஜி.ஆரும், விஜயகாந்த்தும் ஒன்றுதான் என்பது போல இருந்தது அவரது பேச்சு.
அவரது பேச்சிலிருந்து...

எம்.ஜி.ஆர் பேச்சு புரிந்ததா
குண்டடி பட்ட பின்னர் எம்.ஜி.ஆர். பேசிய பேச்சு மக்களுக்குப் புரிந்ததா. அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாமல் பேசினார். ஆனால் மக்களிடையே எம்.ஜி.ஆரின் பேச்சு பிரபலமானது.

அதேபோல
அதேபோல விஜயகாந்த்தின் புரியாத பேச்சும் கூட பட்டி தொட்டியெங்கும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது. எனவே அவரது உடல் நிலை குறித்து கேள்வி எழுப்புவதை விட்டு விடுங்கள்.

யாரைப் பார்க்கிறார்கள்
அதிமுகவில் நேர்காணல் நடப்பதாக சொல்கிறார்கள். தினசரி செய்தும் வருகிறது. தினசரி அதிமுகவினர் பைல்களோடு நடப்பதைப் புகைப்படமாக போடுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரைப் பார்க்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா. இதுவரைக்கும், ஒரு போட்டோவாவது பத்திரிகைகளில் வந்திருக்கிறதா.

ஏன் ரகசியம்
நேர்காணலை ஏன் ரகசியமாக நடத்த வேண்டும். விருப்ப மனு கொடுத்த எல்லாரையும் அழைத்து, ஜெயலலிதா உட்கார்ந்து பேச வேண்டும்; அதற்கு பெயர் தான் நேர்காணல். திமுக - தேமுதிக நேர்காணல் அப்படித்தான் நடந்தது.

சுவரைப் பார்த்து பேசுகின்றார்களா
அதிமுக நேர்காணலுக்கு போகிறவர்கள், ஜெயலலிதாவை பார்த்து பேசுகின்றனரா அல்லது சுவரை பார்த்து பேசிவிட்டு திரும்புகின்றனரா என்பது யாருக்கு தெரியும்? கட்சிக்காரங்களை சந்திக்க முடியாமல், வீட்டிலேயே ஜெயலலிதா முடங்கி கிடப்பது ஏன்; அதை பற்றி எந்த பத்திரிகையாவது செய்தி வெளியிட முடியுமா?

விஜயகாந்த் எங்கே
விஜயகாந்த் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் போய் விட்டார் என சில பத்திரிகைகள் பொய்யாக எழுதுகின்றன. அவர், சென்னை கோயம்பேடு கட்சி அலுவலகத்தில், தேர்தல் பிரசாரம் குறித்த திட்டங்களை வகுத்து வருகிறார். நான் இல்லாமல், அவர் பக்கத்து ஊருக்கு கூட சென்றதில்லை என்றார் பிரேமலதா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications