எல்லா ஊழலையும் செய்த திமுக, காங். மீண்டும் கூட்டணி ஏன்?... பிரேமலதா அதிரடி கேள்வி
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கூட்டணியை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சனிக்கிழமையன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் அழைப்பு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவராக இருக்கிற விஜயகாந்துக்கு நேரடியாகவே கருணாநிதி உங்கள் மூலமாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பே போதுமானது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு வருகிற நேரத்தில் நிச்சயமாக அவருடன் பேசி ஒரு நல்ல முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரேமலதா கூறியதாவது:
பகல் 12 மணிக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணியை அறிவிச்சாங்க... 12.30 மணிக்கு நீங்க ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் பார்த்தீங்கன்னா எந்த அளவுக்கு அதுபற்றி கமெண்ட்ஸ் வந்திருக்கு அப்படின்னு பத்திரிகையாளர்களாகிய உங்க எல்லாருக்குமே தெரியும். இல்லையா? ஏன்னா கடந்த பல ஆண்டுகளாக நடந்த எவ்வளவோ ஊழல்கள், பல பிரச்சனைகளுக்கு இவங்க இரண்டுபேரும்தான் காரணமாக இருக்காங்கங்கிறது தெளிவாக எல்லா ஃபேஸ்புக்கிலும் போட்டிருக்காங்க...மறுபடியும் அவங்க கூட்டணி அமைச்சிருக்காங்க.. எதுக்காங்கிறது நமக்கு தெரியாது... அது 'கலைஞர்' அவர்களிடம்தான் கேட்கனும்...
இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications