கலர் ஜெராக்ஸ் மூலம் ரூ.100 தயாரிப்பு.. திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே கள்ளநோட்டு அடித்தவர் கைது
திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே கள்ளநோட்டு அடித்தவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்: திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் பகுதிகளில் கள்ளநோட்டுக்கள் தயாரித்து புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து புகார்களின் பேரில், அப்பகுதிகளில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் பகுதியிலும் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரமேஷ் என்பவரின் வீட்டினுள் அதிரடியாக நுழைந்த அவர்கள், கள்ள நோட்டுக்கள் தயாரிப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, கலர் ஜெராக்ஸ மூலம் தயாரிக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றினர். அத்துடன், நோட்டுக்களை அச்சடிக்க பயன்படும் பிரிண்டிங் மிஷினையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கள்ள நோட்டுகளை அச்சடித்த குற்றத்திற்காக ரமேஷை கைது செய்த போலீசார், இந்த விவகாரத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு, வேறு யாரேனும் ரமேஷின் பின்னணியில் இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications