முழுவீச்சில் திமுக மாநாடு ராமஜெயம் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டது
திருச்சி: திருச்சியில் வரும் 15ம் தேதி திமுக மாநாடு நடைபெற உள்ளது. தலைவர் கருணாநிதி கொடியேற்றி வைக்கிறார். இதனையொட்டி மாநாட்டு முகப்பில் 90 அடி உயர ராமஜெயம் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டது.
திருச்சியில் திமுக 10வது மாநில மாநாடு வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக திண்டுக்கல் ரோடு பிராட்டியூரில் 10 லட்சம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கும் வகையில் 250 ஏக்கரில் திடல் அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
மாநாட்டு திடலில் பணி களை முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரு மான கே.என்.நேரு தினமும் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
மாநாடு அழைப்பிதழ் தயாராகியுள்ளது. 15ம் தேதி திமுக தலைவர் கலைஞர் கொடியேற்றிவைக்க, பொதுச் செயலாளர் அன்பழகன் மாநாட்டை திறந்துவைக்கிறார். மாநாட்டு முகப்பில் 90 அடி உயர ராமஜெயம் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டது.
கடைகள் ஏலம்
இம்மாநாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் வசதிக்காக 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்த கடைகளுக்கான ஏலம் 7ம் தேதி நடைபெறும் என மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவரும், மாவட்டச் செயலாளாளருமான கே.என். நேரு தெரிவித்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு மாநாட்டு வளாகத்திலேயே ஏலம் நடைபெறும் என்றும், இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அன்றை தினம் காலை 10 மணிக்கு மாநாட்டு அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று நேரு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
வரவேற்பு பேனர்கள்
மாநாட்டுக்கு செல்லும் பாதையில் சாலையின் இருபுறங்களி லும் மாநாடு தொடர்பாக வரவேற்பு பேனர்கள் வைக்கும் கழகத் தோழர் கள் மற்றும் நிர்வாகிகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறு இல்லாமல் வைக்க வேண்டும் என்று நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக பொறுப்பேற்காது
மீறி வைக்கப்படும் பேனர்களை நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறைகளின் அதிகாரிகள் அப்புறப்படுத்தி னாலோ, துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண் டாலோ அதற்கு எந்த வகையிலும் திமுக பொறுப்பாகாது என்றும் நேரு தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் ஒத்துழைப்பு
எனவே, திராவிட இயக்க வரலாற் றில் திருப்புமுனையை ஏற்படுத்த உள்ள கழகத்தின் 10வது மாநில மாநாடு சிறப் புற நடைபெற கட்சியினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் நேரு தொண்டர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுகாவில் இணைப்பு
இதனிடையே மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் மணப் பாறை மற்றும் கருமண்ட பம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications