‛‛உங்களை போல் யாருமேயில்லை’’.. பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ந்துபோன பொம்மன்-பெள்ளி!
நீலகிரி: பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு, பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும் இடையே நடந்த கலந்துரையாடல் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தெப்பக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தம்பதி
பொம்மன் -பெள்ளி. பழங்குடியினத்தை சேர்ந்த இவர்கள் யானை பராமரிப்பாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளை இவர்கள் பராமரித்தனர். ரகு, பொம்மி என பெயரிடப்பட்ட அந்த யானைகளை சொந்த குழந்தைகள் போல் இருவரும் பராமரித்தனர்.

இந்த யானைகளை இந்த தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாக கொண்டு ‛தி எலிபெண்ட் விஸ்பரரஸ்' என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார்
இந்த படத்தில் பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும் யானைக்கும் இடையேயான உறவு மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்து. இதையடுத்து பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர். இருவரையும் பார்க்க ஏராளாமனவர்கள் தெப்பக்காடு கிராமத்துக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி சென்றார். ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை அவர் சந்தித்து கலந்துரையாடி இருவரையும் பாராட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி தங்களிடம் கலந்துரையாடியது பற்றி பெள்ளி கூறியதாவது: பிரதமர் மோடி இன்று காலையில் காரில் இறங்கி வந்து எங்களை சந்தித்தார். கரும்பை எடுத்து ரகு, பொம்மிக்கு(2ம் அவர்கள் வளர்த்த யானைக்குட்டிகள்) கொடுத்தார். யானைகுட்டிகளை எப்படி வளர்த்தீர்கள் என்பது எனக்கு இப்போது தான் தெரியும். உங்களை போல் கர்நாடகா, கேரளாவில் யாரும் யானைக்குட்டிகளை வளர்க்கவில்லை என கூறினார்.

இந்த ஆவணப்படம் எப்படி எடுத்தது என கேட்டார். நீங்கள் ஏதாவது சொல்லி எடுத்தார்களா? என வினவினார். அதற்கு அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் சொல்லாமலே எடுத்துவிட்டார்கள் என்றோம். அப்போது படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. உங்களிடம் சொல்லாமல் தான் எடுத்துள்ளார்கள். அதனால் தான் உங்களை பாராட்ட இங்கு வந்தேன் என்றார்.
மேலும் டெல்லிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என அழைத்தார். அதற்கு நாங்கள் நீங்கள் இங்கு வந்ததே பெருமையாக இருக்கிறது. உங்களை நாங்கள் பார்த்துவிட்டோம் என்றோம். அதற்கு இல்லை இல்லை.. டெல்லிக்கு கண்டிப்பாக 2 பேரும் வர வேண்டும் என்றார். ஒரே முடிவு வந்துதான் ஆக வேண்டும் என்றார். இதையடுத்து ஒன்றாக போட்டோ எடுத்து கொண்டோம்'' என நெகிழ்ச்சியாக கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications