For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களின் நலன் காக்க உறுதிகாட்டியவர் கருணாநிதி.. பிரதமர் மோடி இரங்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்- வீடியோ

    சென்னை: இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு ஆழந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நாம் மிகப்பெரும் ஒரு தலைவரை இழந்திருக்கிறோம். மிகச் சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

    கருணாநிதி பிராந்திய விருப்பங்களுக்காகவும் தேசிய முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். தமிழர்களின் நன்மைக்காக உறுதியாக நின்றவர். தமிழ்நாட்டின் குரலாக ஒலித்தவர்.

    எனக்கு பல சந்தர்ப்பங்களில் கருணாநிதியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருடைய கொள்கை புரிதலும் சமூக நலத்திட்டத்தின் முக்கியத்துவமும் வெளிப்பட்டது. ஜனநாயக கோட்பாட்டில் உறுதியாக இருந்தவர். மேலும், எமர்ஜென்ஸி காலத்தில் அவருடைய உறுதியான எதிர்ப்பு எப்போதும் நினைவுகூறப்படும்.

    இந்த துயரமான நேரத்தில் என்னுடைய எண்ணங்களை கருணாநிதி குடும்பத்தினருடனும் அவருடைய எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன். அவருடைய இழப்பு இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு. அவருடைய ஆன்மா அமைதியடையட்டும் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Prime Minister Modi saddened to Karunanidhi’s death. Modi Tweets: “My thoughts are with the family and the countless supporters of Karunanidhi Ji in this hour of grief. India and particularly Tamil Nadu will miss him immensely. May his soul rest in peace”.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X