சென்னை புழல் சிறையில் "ராம்குமார் ஸ்டைலில்" கைதி தற்கொலை முயற்சி!
சென்னை: சென்னை புழல் சிறையில் ஒரு கைதி சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரை இழுத்துக் கடித்துத் தற்கொலைக்கு முயன்றார். அவரை காவலர்கள் தடுத்துக் காப்பாற்றி மீட்டுள்ளனர்.
சமீபத்தில் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத் தரப்பு தெரிவித்தது. ஆனால் இதுவரை அவரது மரணத்தின் மர்மம் விலகியபாடில்லை.

இந்த நிலையில் மறுபடியும் அதே பாணியில் ஒரு சம்பவம் புழல் சிறையில் நடந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லி ராஜா. இவர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் சுவிட்ச் பாக்ஸை உடைத்து வயரைக் கடித்துத் தற்கொலை செய்ய முயன்றாராம். இதையடுத்து அருகில் இருந்த காவலர்கள் அவரைப் பாய்ந்து சென்று காப்பாற்றி மீட்டனராம்.
ராம்குமார் உடைத்துக் கடித்த அதே சுவிட்ச் பாக்ஸை டில்லி ராஜாவும் உடைத்தாரா என்று தெரியவில்லை!
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications