சென்னை புழல் சிறையில் கைதி கணேஷ் தற்கொலை!
சென்னை புழல் மத்திய சிறையில் கைதி கணேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: புழல் மத்திய சிறையில் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட கைதி கணேஷ் தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவில் இருந்து போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டவர் கணேஷ். சென்னை புழல் மத்திய சிறையில் கணேஷ் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் திடீரென கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கைதி கணேஷ் உயிரிழந்தார். சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் தற்கொலை தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications