பெரிய அளவில் வெடிக்கும் போராட்டம்.... தனியார் செவிலியர்கள் சங்கம் ஆதரவு
செவிலியர்களின் போராட்டத்திற்கு தனியார் செவிலியர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
சென்னை : செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காவிட்டால் தாங்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தனியார் செவிலியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கடந்த மூன்று நாட்களாக டி.எம்.எஸ் வளாகத்தில் போராடி வருகிறார்கள். அமைச்சரிடம் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் செவிலியர்களின் கோரிக்கையை தற்போது ஏற்க முடியாது என்று கைவிரித்து இருக்கிறது அரசு.

அதனால் இன்று காலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக அறிவித்து போராடி வருகிறார்கள் செவிலியர்கள். இதுவரை எந்த ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நேரில் வந்து சந்திக்காத நிலையில் ,போலீஸார் அந்த இடத்தில் இருந்து செவிலியர்களை அப்புறப்படுத்த பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ள நிலையில், திமுக ராஜ்யசபா எம்.பி, கனிமொழி செவிலியர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார். மேலும் , இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது செவிலியர்களின் இந்தப் போராட்டத்திற்கு தனியார் செவிலியர்கள் சங்கம் ஆதரவளித்து உள்ளது. செவியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் தாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக தனியார் செவிலியர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது. செவிலியர்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில் அரசு தொடர்ந்து மவுனம் காத்து வந்தால் , தமிழகத்தில் மருத்துவத்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications