சகாயம் குழுவுக்கு ஆதரவாக மதுரையில் இயக்கம் தொடக்கம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கவுள்ள சகாயம் குழுவுக்கு ஆதரவாக மதுரையில் ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
சகாயம் தலைமையில் 15 பேர் கொண்ட குழு இந்த விசாரணையை நடத்தவுள்ளது. விரைவில் விசாரணை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மதுரையில் சகாயம் குழுவுக்கு ஆதரவாக இயக்கம் ஒன்றை முகிலன் என்பவர் தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கத்திற்கு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் என்று பெயரிட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்த இயக்கத்தின் கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் வி்வரம்:
- கனிமவள முறைகேடுகளை விசாரணை செய்யும் சகாயம் குழுவினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக ஆர்வலர்களை ஒருங்கிணைத்து உதவ வேண்டும்.
- சகாயம் ஆய்வுக்குழு தனது செயல்பாட்டை மிகவும் வெளிப்படையாக வைத்து இருக்க வேண்டும்.
- மக்கள் எளிமையாக குழுவினரை தொடர்பு கொள்ளும் பொருட்டு மின் அஞ்சல் முகவரி மற்றும் முகநூல் பக்கத்தினை தொடங்க வேண்டும்.
- கனிமவள முறைகேடுகள் மிகுதியாக நடந்த இடங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, கிருட்டிணகிரி ஆகிய பகுதிகளுக்கு குழுவினர் நேரடியாக வந்து மக்களை சந்தித்து ஆய்வு செய்ய வேண்டும்.
- கனிமவள முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மட்டும் அல்லாமல் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், மக்களின் உடல் நல பாதிப்புகள், குடிநீர், மின் மற்றும் பல்வேறு பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை செய்ய வேண்டும்.
- கிராம நிர்வாக அலுவலர் கனிமவள முறைகேடுகளை பற்றி தகவல் அளிக்கும் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
- விசாரணையில் அந்தந்த பகுதிகளில் தங்கியிருந்து பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் உரிய முறைகேடுகள் பற்றி அறிக்கைகள் தயார் செய்து பெற வேண்டும். அதில் தவறான தகவல்கள் விடப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications