சசிகலா பிடிவாதம்.. சட்டசபையை கூட்டும் வரை எம்எல்ஏக்கள் ரிசார்ட்டிலேயே தங்கியிருக்க உத்தரவு!
சட்டசபையைக் கூட்டும் வரை எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டிலேயே இருக்க வேண்டும் என்று சசிகலா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: சிறைக்குப் போவது உறுதியாகி விட்ட நிலையிலும்ம கூட தனது பிடிவாதத்தை விடுவதாக இல்லை சசிகலா. சட்டசபையைக் கூட்டும் வரை தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிசார்ட்டில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. வெளியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தடியடி நடத்துவதற்கு வசதியாக தடிகளுடன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளே தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் பெரும் தத்தளிப்பில் உள்ளனர்.

ஆனால் என்ன நடந்தாலும் சரி சட்டசபையைக் கூட்டட்டும். அதன் பிறகுதான் அனைவரும் வெளியேற வேண்டும் என்றுசசிகலா கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரவோடு இரவாக உள்ளே புகுந்து போலீஸார் அத்தனை பேரையும் வெளியே கொண்டு வருவார்களா என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சசிகலாவின் தேவையில்லாத பிடிவாதத்தால் கடந்த 7 நாட்களாக உள்ளே சிக்கிக் கொண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் படாதாபாடு பட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications