'கரண்ட்' இல்லை, அதனால்தான் 'பவர் கட்'... மின்தடைக்கு அதிகாரிகள் விளக்கம்!

இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன போது, அப்போதைய மின்பற்றாக்குறையை போக்க காற்றாலை மின்சாரம் ஓரளவு கைகொடுத்தது. தற்போது அதேபோன்று வடகிழக்கு பருவமழை நன்கு பெய்தால் நீர்மின்சார நிலையங்களிலும், காற்றாலைகளும் ஓரளவு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் மின்சார உற்பத்தியும் வெகுவாக குறைந்தது. அதேநேரம் குளிர் அதிகமாக இருப்பதால் தற்போது ஏசி, மின்விசிறி போன்ற மின்சாதனங்களின் பயன்பாடும் குறைந்திருப்பதால் மின்சாரத்தின் தேவையும் சற்று குறைந்துள்ளது.
புதிய மின்உற்பத்தி நிலையங்களும் வணிக உற்பத்திக்கு வருவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டு, சோதனை ஓட்டத்திலேயே இருப்பதால் புதிய அனல்மின்நிலையங்களிலும் எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி இல்லாத நிலை இருந்து வருகிறது.
மின்உற்பத்தியை பொறுத்தவரையில் நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் நேற்று காலை 7.50 மணி நிலவரப்படி 1,108 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அனல் மின்நிலையங்களில் 2,795 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட்டன. காற்றாலையை பொறுத்தவரையில் 15 மெகாவாட் மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்தன.
மத்திய தொகுப்பு மற்றும் இதர வழிகளில் பெறப்பட்ட மின்சாரங்களை சேர்த்து 10 ஆயிரத்து 27 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டன. ஆனால் தேவை சற்று அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே 1,350 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக மின்தடை செய்யப்பட்டுள்ளது''என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications