ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் பேராசியர் ஜெயராமன் குடும்பத்தோடு கைது!
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் விளைநிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேராசிரியர் ஜெயராமன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்.
இதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். கதிராமங்கலத்தில் நிலத்தடிநீரைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கடந்த மே மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

திருச்சி சிறையில் அடைப்பு
கடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் பதிலடி கொடுத்ததால் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேராசியர் ஜெயராமனுக்கு ஜாமீன்
கைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தேசத்துரோக வழக்குப் பதிவு
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஓஎன்ஜிசிக்கு எதிராக புத்தகம் எழுதியதாக ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கப்பதிவு செய்யப்பட்டது. பேராசியர் ஜெயராமன் மீது தேசதுரோக வழக்கப்பதிவு செய்த தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

மனைவியுடன் கைது
இந்நிலையில் திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உட்பட 4 பேரை நன்னிலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

போராட தூண்டியதாக வழக்கு
ஓஎன்ஜிசி மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை போராட தூண்டி வருவதாக ஜெயராமன் மீது நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலையில் கைதாகி ஜாமினில் வந்துள்ள ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications