பெண்கள் குரல் கொடுத்தால் நாட்டில் மதுவிலக்கு சாத்தியம்: சொல்கிறார் வெங்கையா நாயுடு
சென்னை: தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மக்கள், பெண்கள் ஒற்றுமையுடன், எழுச்சியுடன் குரல் எழுப்பினால் மட்டுமே நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியம் ஆகும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பில் ரகசியம் உள்ளது என்று காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. இதை அரசியலாக்க கூடாது. அது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மக்கள், பெண்கள் ஒற்றுமையுடன், எழுச்சியுடன் குரல் எழுப்பினால் மட்டுமே நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியம் ஆகும்.
இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் குரல் கொடுக்கின்றனர். ஆனால், தீவிரவாதிகள், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உள்பட கடுமையான தண்டனை வழங்குவது அவசியம் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
இந்திய நாட்டின் மதிப்பு இன்று உலகளவில் உயர்ந்துக் கொண்டு இருக்கிறது. பா.ஜ.க. அரசு லஞ்சம், லாவணியம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் செல்வாக்கு, நற்பெயர் அதிகரித்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்குகிறது.
நாடாளுமன்றத்தில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டத்தை ஜனநாயக படுகொலை என்று காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. ஆனால், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது 1989 ஆம் ஆண்டு 63 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அதை என்னவென்று சொல்வது?" என்றார்.
வலுவான இந்தியாவை உருவாக்கும் முனைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தை தடுக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. தற்போது எதிர்கட்சியாக இருக்கும் போதும் அதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் வெங்கையா நாயுடு.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications