கோவையில் வீட்டில் பாலியல் தொழில்: புரோக்கர் கைது- 3 பெண்கள் மீட்பு
கோவை: கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அங்கு பாலியல் தொழில் செய்து வந்த மூன்று பெண்கள் மீட்கப் பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு இரவில் அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதாகவும், அங்கு விபசாரம் நடைபெறுவதாகவும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேணி தலைமையிலான போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.
போலீசாரின் தீவிர கண்காணிப்பில் அந்த வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த வீட்டில் செந்தில் நாராயணன் என்ற புரோக்கரும், அவருடன் மூன்று பெண்கள் தங்கி இருந்துள்ளனர். புரோக்கரைக் கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மூன்று பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து புரோக்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாதம் ரூ. 4 ஆயிரம் கொடுத்து இந்த வீட்டை வாடகைக்கு பிடித்ததாகவும், தனக்கு தெரிந்த பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications