காருக்குள் விபச்சாரம் செய்த 3 வெளிமாநில அழகிகள் மீட்பு: 2 புரோக்கர்கள் கைது
கோவை: கோவை அருகே காருக்குள் விபசாரத்தில் ஈடுபட்ட 3 வெளிமாநில அழகிகளை மீட்ட போலீசார் 2 புரோக்கர்களை கைது செய்தனர்.
கோவையை அடுத்துள்ளது சரவணம்பட்டி. இங்கு காருக்குள் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் வந்தது.
விபசார கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு சரவணம்பட்டியில் உள்ள திருமண மண்டபம் அருகே ரோந்து வந்தனர். மண்டபத்தின் அருகே ஒரு கார் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது.
சந்தேகமடைந்த போலீசார் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் 3 பெண்கள், 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள்.
எனவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணையை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் விபசார கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
காருக்குள் இருந்த 2 வாலிபர்களில் ஒருவர் விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 25) என்பதும், மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்த செந்தில் (34) என்பதும் தெரியவந்தது.
காரில் இருந்த பெண்களில் இருவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரீமா (20), அனுஷா (23) ஆவார்கள். மற்றொருவர் கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த பத்மபிரியா என்று தெரியவந்தது.
வெளிமாநிலத்தில் இருந்து அழகிகளை அழைத்து வந்த புரோக்கர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தி 1 மணி நேரத்துக்கு ரூ.3 ஆயிரம் வசூலித்துள்ளனர்.
அழகிகளை வைத்து பங்களாவில் விபசாரம் நடத்தினால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர்கள் முக்கிய பிரமுகர்களுடன் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர்.
அவர்கள் சம்மதம் தெரிவித்ததும் அழகிகளை காரில் அழைத்துச்சென்று அவர்கள் கூறும் இடத்தில் கொண்டு விடுவார்கள். முக்கிய பிரமுகர்கள் அழகிகளை அழைத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் அழகிகளை புரோக்கர்கள் அழைத்து வருவார்களாம்.
இதனையடுத்து புரோக்கர்கள் விஜயகுமார், செந்தில் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் அழகிகள் 3 பேரையும் மீட்டனர். மீட்கப்பட்ட 3 அழகிகளும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். புரோக்கர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், கார், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த செல்போன்களில் கோவையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் உள்ளதால் கோவை மாவட்ட முக்கிய புள்ளிகள் கதிகலங்கி போயுள்ளனர்.
புரோக்கர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications