சென்னையில் ஆன்லைன் விபசாரம்: 2 பெண்கள் மீட்பு- 4 புரோக்கர்கள் கைது
சென்னை: ஆன்லைன் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களை போலீசார் மீட்டு நான்கு புரோக்கர்களை கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சொகுசு காரில் வெளி மாநில அழகிகள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்காக 4 புரோக்கர்கள் வாடிக்கையாளர்களை தேடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த காரை சுற்றி வளைத்தனர். அதில் ஆந்திரா மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த 2 பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டனர்.
அங்கு நின்று கொண்டிருந்த 4 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன், இளையான்குடியை சேர்ந்த சுந்தரபாண்டியன், திண்டுக்கல்லை சேர்ந்த விஜயராகவன், சிவகங்கையை சேர்ந்த கணேசன் என்று தெரியவந்தது.
இவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தேடிப்பிடிப்பார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் கேட்கும் இடங்களுக்கு அழகிகளை கொண்டு ஒப்படைக்கிறார்கள்.
அதுபோல தற்போது வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்தபோதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர்.
சென்னையில் விபசாரத்தை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு செயல்படுகிறது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications