For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க நித்தியானந்தாவுக்கு கடும் எதிர்ப்பு! வெடிக்கிறது போராட்டம்!!

By Mathi
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது பெங்களூர் பிடதி ஆசிரமத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றன.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு பெங்களூரில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அத்துடன் நித்தியானந்தாவுக்கு கன்னட அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

திருவண்ணாமலைக்கு மாற்றம்

திருவண்ணாமலைக்கு மாற்றம்

இதனைத் தொடர்ந்து பிடதி ஆசிரமத்தில் சீடர்களிடம் பேசிய நித்யானந்தா, பெங்களூர் போலீஸார் மற்றும் மருத்துவர்கள் என்னை அவமதித்துவிட்டனர். இதனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல இருக்கிறேன் என தெரிவித்தார்.

தமுஎச எதிர்ப்பு

தமுஎச எதிர்ப்பு

இதற்கு திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த அருணன் கூறுகையில், நித்தியானந்தாவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய அமைப்புகள், கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். திருவண்ணாமலையில் நித்தியானந்தாவை பீடம் அமைக்க விடமாட்டோம் என்றார்.

இ.கம்யூ எதிர்ப்பு

இ.கம்யூ எதிர்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் கூறும்போது, இதுகுறித்து தலைமையிடம் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து நடவடிக்கை எடுப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி கூட்டு இயக்கமாக போராட்டம் நடத்துவோம் என்றார்.

தமிழ்த் தேச மக்கள் கட்சி

தமிழ்த் தேச மக்கள் கட்சி

தமிழ்த் தேசிய மக்கள் கட்சி நிறுவனர் சிவபாபு கூறுகையில், நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு வருவதை எதிர்க்கவில்லை ஆனால், கிரிவலப் பாதையில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவதை ஏற்க முடியாது.

கிரிவலப் பாதையில்..

கிரிவலப் பாதையில்..

பழைய இடத்தில் ஆசிரமம் தொடங்கினால் அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும். ஆசிரமம் அமைக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. கிரிவலப் பாதைக்கு வெளியே வேறு எந்த இடத்திலும் நித்தியானந்தா ஆசிரமம் அமைக்க எங்களுக்கு எந்த தடையும் இல்லை என்றார்.

English summary
Left parties and Tamil movements protest against Nithyananada to shift his base to Tiruvannamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X