ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் ஏப்ரல் 8ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம்.. டிடிவி தினகரன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கர்நாடக தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என அவர் கூறினார்.
திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் மக்களுக்காக போராடினால் கலந்து கொள்வோம் என்றும் தினகரன் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications