அனிதா மரணம் - சென்னை பல்கலையில் உள்ளிருப்பு - திருச்சியில் உண்ணாவிரதம்

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, வெள்ளிக்கிழமையன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Protests in Students over NEET petitioner Anitha’s suicide

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால் மன விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் வெடித்தது.

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சேப்பாக்கத்தில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அனிதாவின் தற்கொலைக்கு விசாரணைக்குழு அமைக்கவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

5 பேருடன் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் தற்போது 63 பேராக உயர்ந்துள்ளது. திருச்சியில் பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையிலும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+