தேர்தல்.. தேர்தல்... தமிழகத்தில் 8 எஸ்.பிக்களுக்கு டிஐஜி பதவி
சென்னை: தமிழக காவல்துறையில் இருந்து 8 காவல்துறை கண்காணிப்பாளர்கள், டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும், சென்னைக்கு புதிய இணை கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், "சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரி பவானீஸ்வரி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் ஜோஷிநிர்மல்குமார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை வடக்கு இணை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.
சென்னை வடக்கு இணை போலீஸ் கமிஷனர் தினகரன், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பன்னீர்செல்வம், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் சென்னை சீருடை பணியாளர் தேர்வாணய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் நாகராஜன், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார். சென்னை மேற்கு இணை கமிஷனர் நஜ்முல்ஹோடா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். சென்னை கமாண்டோபடை சூப்பிரண்ட் சந்தோஷ்குமார் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, சென்னை மேற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் சீருடை பணியாளர் தேர்வாணய சூப்பிரண்ட் கயல்விழி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு இணை போலீஸ் கமிஷனர் அருண், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை சரக டி.ஐ.ஜி.அன்பு,சென்னை தெற்கு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார். சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ரூபேஸ்குமார் மீனா,சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் சரக டி.ஐ.ஜி.வித்யா ஜெயந்த்குல்கர்னி, சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டு தேன்மொழி டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சி.பி.ஐ.போலீசில் தொடர்ந்து அவர் பணியாற்றுவார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பாதுகாப்பு பிரிவு உதவி ஐ.ஜி.யாக பணியாற்றும் கபில்குமார் சரத்கார், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுவார்.
நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல் செயலாளராக பணியாற்றும் டாக்டர் கண்ணன், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications