மூதாட்டிகளை நிர்வாணப்படுத்தி கொன்றது ஏன்: சைக்கோ கொலையாளியின் பரபர வாக்குமூலம்
யாரும் பெண் தராததால் மூதாட்டிகளை கொலை செய்ததாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளான்.
Recommended Video

சோளிங்கர்: திருமணம் செய்து கொள்ள யாரும் பெண் தராததால் மூதாட்டிகளை நிர்வாணப்படுத்தி கொலை செய்ததாக சைக்கோ கொலையாளி முனுசாமி வாக்குமூலம் அளித்துள்ளான்.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் தெய்வானை என்ற மூதாட்டி கடந்த மாதம் 16ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கலை சேர்ந்த சைக்கோ ஆசாமி முனுசாமியை கடந்த மாதம் 22ம் தேதி ஆந்திர போலீசார் கைது செய்து சித்தூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மூதாட்டி கொலை சம்பந்தமாக காவலில் எடுத்து முனுசாமியை விசாரிக்க சோளிங்கர் கோர்ட்டில், போலீசார் மனு அளித்தனர். அதை ஏற்று நேற்று ஒருநாள் மட்டும் அனுமதி அளித்தது.
இதையடுத்து நேற்று காலை சித்தூர் சிறையில் இருந்த முனுசாமியை பலத்த பாதுகாப்புடன் சோளிங்கர் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் முனுசாமி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
முனுசாமி 1990ல் தொடங்கி 2001 வரை பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதையடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.
சிறையில் இருந்தபோது, 'தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது' என ஒருவர் கூறியுள்ளார். அதன்படியே 2017ல் சிறையில் இருந்து வெளியில் வந்தவன் கல்லால் தாக்கி பெண்களை அதுவும் மூதாட்டிகளை கொலை செய்ய தொடங்கியுள்ளான்.
குற்றவாளி என்பதால், திருமணம் செய்ய இவனுக்கு பெண் கொடுக்கவில்லை. இதனால் பெண்கள் மீது வெறுப்படைந்த முனுசாமி சைக்கோவாக மாறியுள்ளான்.
ஆனாலும், பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தால் எய்ட்ஸ் வருமோ என்ற அச்சம் காரணமாக, தனியாக இருக்கும் மூதாட்டிகளை நோட்டமிட்டு நிர்வாணப்படுத்தி தலையில் கல்லை போட்டு, அவர்களை கொலை செய்துள்ளான்.
திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தவிர இவன் 4 மூதாட்டிகள், இளம்பெண் ஒருவர், ஒரு குழந்தை என 6 பேரை கொலை செய்துள்ளான். இவனது கொலை முயற்சியில் 2 பேர் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்து சோளிங்கர் போலீசார் முனுசாமியை நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சித்தூர் சிறையில் அடைத்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications