ஜல்லிக்கட்டு வேண்டும்... மதுரையில் ரயில் மறியில்... தள்ளமுள்ளால் பரபரப்பு
ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் முழக்கமிட்ட
மதுரை: ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டாவது நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடந்த சில நாட்களாக தீவிரபோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் பொங்கல் திருநாளான இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்துவிடக் கூடாது என்பதற்காக காவல்துறையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அலங்காநல்லூர் பகுதி பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மதுரையில் திரண்டு ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை அவனியாபுரத்தில் இளைஞர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பேரணி நடத்தினர். அவனியாபுரத்தில் வாடிவாசல் முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேரணி தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications