ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுங்க.. மயிலை எம்.எல்.ஏ. நடராஜ் அலுவலகம் முற்றுகை
மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். அவர்கள் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு இடையேயான அதிகாரப் போட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்கள் அரசியல் கட்சியினர் எம்எல்ஏக்கள் என அனைத்து தரப்பினரும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்து வருகின்றனர்.

பொது மக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவளிக்கக்கோரி அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூர் அதிமுக எம்எல்ஏ அலுவலகத்தை அப்பகுதி அதிமுகவினர் திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது முதல்வர் ஓபிஎஸை ஆதரிக்க வேண்டும் என முழக்கமிட்டு அவர்கள் வலியுறுத்தினர். எம்.எல்.ஏ. நடராஜ் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென் சென்னை தெற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மொசைக் வே.ஜெகதீஸ் தலைமையில் அபிராமபுரம, சி.பி.ராமசாமி சாலையில் உள்ள நடராஜ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏவான நட்ராஜ் யார் அணியிலும் இல்லை என்று நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications