24 மணி நேரமும் சரக்கு விற்பனை.. கோவையில் மூடப்பட்ட டாஸ்மாக் அருகே பார் திறப்பு.. பொதுமக்கள் அச்சம்
இடையூறாக இருக்கும் டாஸ்மாக் பாரினை திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை: கோவையில் நீதிமன்றத்தால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு அருகே சட்டவிரோதமாக பார் திறக்கப்பட்டு, அதில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். 24 மணி நேரமும் செயல்படுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவால் அந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மூடப்பட்டு இருந்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை தற்போது வரை மூடப்பட்டு இருக்கும் சூழலில், அதன் அருகே உள்ள பார் மட்டும் 24 மணி நேரமும் திறக்கபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வரும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளது. இந்த பாரின் அனைத்து நேரங்களிலும் திறந்து வைக்கப்படுவதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், அருகேயே பள்ளி மற்றும் தொழிற்சாலைகள் இருப்பதால் மாலை நேரங்களில் குடித்து விட்டு சிலர் பெண்களிடம் தகராறில் ஈடுபடுவதாகவும் எனவே உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications