பிளஸ் 2 தேர்வு முடிவு: தமிழகத்தைப் போலவே புதுவையிலும் 2 மாணவிகள் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் இரண்டு மாணவிகள் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

Pudhucherry plus 2 results released

காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் தமிழக மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் புதுவையில் சற்று தாமதமாகவே பிளஸ் டூ தேர்வு முடிகள் வெளியானது.

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் இரண்டு மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். புதுவை பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இந்துஜா, நிகிதா என்ற இரண்டு மாணவிகள் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

இரண்டாவது இடத்தில் 1186 மதிப்பெண்கள் பெற்று பெட்டி செமினார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஹரி பாலாஜி உள்ளார். மூன்றாவது இடத்தை 1182 மதிப்பெண்களுடன் பேட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பிரதிக்‌ஷா பிடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+