புதுச்சேரியில் 100 ரூபாய் பீஸ் வாங்கிக் கொண்டு ஊசி போட்ட போலி டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: எதை எடுத்தாலும் ரூபாய்க்குப் பத்து என்று மார்க்கெட்டில் விற்பது போல, எந்த நோயாக இருந்தாலும் பீஸ் ரூ. 100 என்று வாங்கிக் கொண்டு ஊசி போட்டு மருந்து கொடுத்து வந்த போலி டாக்டரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு கிளினிக் நடத்தி வந்துள்ளார். அந்த கிளினிக்குக்கு வந்தவர்களிடம் தலா ரூ. 100 பீஸாக வசூலித்தார். பிறகு ஊசி போடுவது, மருந்து கொடுப்பது என்று நடந்து வந்துள்ளார்.

{ventuno}

இவர் மீது சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ராஜ்குமார் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.

ராஜ்குமார் டி பார்ம் படித்தவர்.ஆனால் டாக்டராக கடந்த 3 வருடமாக செயல்பட்டு வந்துள்ளார். அவரைக் கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது கிளினிக்கிலிருந்து மருந்துகள், உபகரணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+