விஐபிகளின் கார்களில் சைரன் பயன்படுத்த தடை: கிரண் பேடியின் அடுத்த அதிரடி
புதுச்சேரி: புதுச்சேரியில் விஐபிகள் தங்கள் கார்களில் சைரன் பயன்படுத்த அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கடந்த 29ம் தேதி பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி. திகார் சிறையில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்த அவர் தற்போது புதுச்சேரியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
அவரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சைரன்
விஐபிகளின் கார்கள் சென்றாலே சைரன் ஒலி காதை கிழிக்கும். இந்நிலையில் விஐபிகளின் கார்களில் சைரன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் கிரண் பேடி. இந்த உத்தரவு கிரண் பேடியின் பாதுகாவலர்களின் வாகனங்களுக்கும் பொருந்தும்.

ஸ்பெஷல்
விஐபிகள் என்பதால் அவர்களுக்கு என்று இனி எந்தவித சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஐபிகள் சாலைகளில் கார்களில் செல்கையில் அவர்களின் வசதிக்காக எந்த இடத்திலும் போக்குவரத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் கிரண் பேடி.

புகார் நேரம்
தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை அரசு உயர் அதிகாரிகளை பொதுமக்கள் சந்தித்து புகார் அளிக்கலாம் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார். மாலை 5 மணி முதல் 6 மணி வரை எந்த அலுவலக கூட்டங்களும் நடத்தப்படக் கூடாது என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ்ஆப் குரூப்
தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், ஐஜி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்ந்துள்ளார் கிரண் பேடி. மக்கள் அளிக்கும் புகார்களை அந்த குரூப்பில் தெரிவித்து உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications