காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுக... பிரதமருக்கு கிரண்பேடி வலியுறுத்தல்!
காவிரி மேலாண்மை வாரியம் காரைக்கால் விவசாயிகளுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதால் அதனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
Recommended Video

புதுச்சேரி : காவிரியின் கடைமடையான காரைக்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் சிறக்க காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : உச்சநீதிமன்றம் அண்மையில் காவிரி நீரால் பாசன வசதிகள் பெறும் மாநிலங்கள் தொடர்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் காவிரி நீரின் கடைமடைப் பகுதி. காரைக்காலில் நடைபெறும் விவசாயப் பணிகள் அனைத்துமே காவிரி நீரை நம்பியே உள்ளது. காவிரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கடைமடைக்கு நீர் வந்து சேருவதில்லை.

விவசாயம் கேள்விக்குறி
இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே காரைக்கால் பகுதியில் விவசாயம் குறைந்துள்ளதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 7 டிஎம்சி நீரானது ஒதுக்கப்பட்டுள்ளது.

வாரியம் கட்டாயம்
இந்த நீர் முறையாக திறந்து விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டியது கட்டாயமாகிறது. உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் மத்திய அரசு காவிரி நீர் பகிர்வை சுமூகமாக மேற்கொள்ள 6 வார காலத்திற்குள் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நதிநீர் பங்கீட்டு சட்டம் 1956படி குறிப்பிட்டுள்ளனர்.

தாமதத்தால் அசாதாரண நிலை
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் மேலும்ம 3 மாத கால அவகாசத்தை மத்திய அரசு கோரியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று காரைக்கால் விவசாயிகள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். தற்போது உச்சநீதிமன்றத்தின் மூலம் அந்த தீர்ப்பு கிடைத்த நிலையில் கால நீட்டிப்பு கோருவதால் விவசாயிகள் மத்தியில் அசாதாரண சூழலை ஏற்படுத்துகிறது.

பிரதமர் உத்தரவிட வேண்டும்
எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசம் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் காரைக்கால் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கிரண்பேடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications