நாராயணசாமி காருக்கு அடியில் வெடிகுண்டு... புதுச்சேரியில் பந்த்
புதுச்சேரி: மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் காருக்கு அடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டது தொடர்பாக புதுச்சேரியில் இன்று பந்த் அனுசரிக்கப்படுகிறது.
முழ அடைப்பு்ப் போராட்டத்திற்கு பரவலாக ஆதரவு கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் முக்கிகய இடங்களான நேரு வீதி, காந்தி வீதி, மீன் மார்க்கெட், சந்தைகள் மூடப்பட்டுள்ளன.

தனியார் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன. மேலும் ஆட்டோக்கள், டெம்போக்களும் கூட ஓடவில்லை.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு வணிகர்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. வெடிகுண்டு வைத்த குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

இதுவரை எந்தவிதமான அசம்பாவித சம்பவும் நடந்ததாக தகவல் இல்லை. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications