Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுவையில் மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல் கைது– மைனர் பெண்ணும் உடந்தை!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மைனர் பெண் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

புதுச்சேரி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் குழந்தைகள் ஹெல்ப் லைன் அமைப்பில் புகார் கொடுத்தனர்.

அதில் தங்களை ஒரு கும்பல் மிரட்டி அடிக்கடி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாகவும், தங்களை காப்பாற்றும்படியும் கூறியிருந்தனர்.

வழக்குப் பதிவு:

இது குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் டாக்டர் வித்யா ராம்குமார், டிஜிபி காமராஜிடம் புகார் அளித்தார். டிஜிபி உத்தரவின் பேரில் புகாரை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் காயிதே ஆசாம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

5 பேர் கைது:

பள்ளி மாணவிகளை பண ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளி, அதனை ஆபாச வீடியோ படம் எடுத்து மிரட்டி மாணவிகளை அடிக்கடி விபசாரத்தில் தள்ளிய அருள்மேரி , புஷ்பா, மாணிக்கம், ரகுமான், 14 வயது மைனர் பெண் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.

செல்போன் விசாரணை:

புஷ்பாவின் செல்போனுக்கும், புகார் அளித்த பள்ளி மாணவிகளின் செல்போனுக்கும் அடுத்தடுத்த நேரத்தில் வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர்.

மைனர் பெண்ணும் உடந்தை:

செல்போன் எண் முகவரியை வைத்து விசாரித்தபோது புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த 14 வயது மைனர் பெண்ணும் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் முதலில் புஷ்பாவிடம் சிக்கி விபசாரத்தில் ஈடுபட்டார்.

ஆசை காட்டி மோசம்:

பின்னர் சக வயதுடைய பள்ளி மாணவிகளை நண்பர்களாக்கி அவர்களிடம் பாலியல் தொடர்பான ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். புரோக்கர் புஷ்பாவிடம் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்தார்.

பணத்தால் வந்த வினை:

இதனை பயன்படுத்திக்கொண்ட புஷ்பா மாணவிகளுக்கு ஆடம்பர செலவு செய்தும், பணத்தின் மீது அதிக ஆசை ஏற்படுத்தி ஏமாற்றியுள்ளார். தகாத உறவு வைத்துக்கொள்ளும்படியும் கட்டாயப்படுத்தப்படுத்தியுள்ளார். பண ஆசையால் பள்ளி மாணவிகள் விபசாரத்தில் விழுந்தது தெரியவந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்:

பள்ளி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய குற்றத்திற்காக மைனர் பெண்ணை போலீசார் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

மைனர் பெண்ணின் குழந்தை:

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 14 வயது மைனர் பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தை தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

முழுநெட்வொர்க் தகவல்கள்:

சிபிசிஐடி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், முதலில் 5 பேரும் தற்போது 14 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் விபசார புரோக்கர் புஷ்பாவின் முழு நெட்வொர்க் பற்றிய பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.

அதிர்ச்சியில் போலீஸார்:

இதில் புதுவையை சேர்ந்த 25 முக்கிய பிரமுகர்களும், தமிழகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆண்களும் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் பட்டியல் நீள்வதால் சிபிசிஐடி போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+