புதுவை நியமன எம்எல்ஏ-க்களை ஏற்க சபாநாயகர் மறுப்பு... கோப்புகளை திருப்பி அனுப்பினார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுவை: துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்த நியமன உறுப்பினர்களை ஏற்க மறுத்து அது தொடர்பான கோப்புகளை புதுவை சட்டசபை சபாநாயகர் வைத்திலிங்கம் திருப்பி அனுப்பினார்.

புதுச்சேரி சட்டசபைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ள சட்டத்தில் இடம் உண்டு. அதன்படி நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்தார்.

Puducherry speaker refused to agree appointment of 3 nominee mlas to assembly

இதன்பேரில், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்தது. இந்த மூவருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தன் அலுவலகத்தில் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இது சட்டவிதிகளுக்கு முரணானது என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். மேலும் கிரண் பேடியின் இந்த செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். நியமன எம்எல்ஏ-க்கள் நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ தொடர்ந்துள்ள வழக்கில் புதுவை அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்த சூழலில் ஆளுநர் கிரண் பேடியால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களை ஏற்க மறுப்பு தெரிவித்து ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வந்திருந்த கோப்புகளை சபாநாயகர் வைத்திலிங்கம் திருப்பி அனுப்பினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puducherry assembly speaker Vaithilingam refuses to accept the appointment of 3 nominee mlas appointed by Lieutenant Governor Kiran Bedi.
Please Wait while comments are loading...