அம்மாவுக்கு மாத்திரை வாங்க பணமில்லை... மனமுடைந்த திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் தாயாரின் மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால், மனமுடைந்த திருநங்கை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பொன்னுகண்ணு (70), என்பவரின் மகன் சிவக்குமார் (40). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு சென்று திருநங்கையாக மாறிய சிவக்குமார், தனது பெயரை ரேவதி என மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பொன்னுகண்ணுவை, ரேவதி தான் உடனிருந்து கவனித்து வந்தார். கடந்த சில நாட்களாக பொன்னுகண்ணுவின் உடல்நிலை மிகவும் மோசமானது.
ஆனால், பொன்னுகண்ணுவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ரேவதியிடம் போதுமான பணம் இல்லை. இதனால், மனமுடைந்த ரேவதி, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் ரேவதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரேவதியின் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications