63 வயது தாத்தா செய்த வேலையைப் பாருங்க சார்...!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சட்ட விரோதமாக துப்பாக்கி தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வந்த முதியவர் ஒருவரை குற்றவியல் நுண்ணறிவு போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்ற 63 வயது முதியவர். இவர் தன்னுடைய வீட்டிலேயே சட்டவிரோதமாக துப்பாக்கி தயார் செய்து விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து நகர காவல் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் நேற்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், சீனிவாசன் வீட்டில் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர் போலீஸார்.
இந்நிலையில்தான் இவர் மேல் ஏற்கனவே ஸ்ரீரங்கம் மற்றும் கண்டோன்மெண்ட் காவல்துறையிலும் சட்ட விரோதமாக ஆயுத தயாரிப்பு, பதுக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மூன்றாவது முறையாகத்தான் இவர் புதுக்கோட்டை போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதனையடுத்து சீனிவாசன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications