குடிபோதையில் மாணவர்கள் ரகளை – பெற்றோருடன் அனுப்பி வைத்த ஆசிரியர்கள்
புதுகை: புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 15 பேர் மது போதையில் ரகளை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறி பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் கீரமங்கலம் மட்டுமின்றி அருகில் உள்ள தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் விடுதிகளில் தங்கியும், தினசரி வீடுகளுக்கு சென்று வந்தும் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தபோது அந்த பள்ளியில் படிக்கும் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வெளியே ஒரு தைலமரக்காட்டில் நன்றா குடித்து விட்டு மது போதையில் மது பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதி பொதுமக்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. உடனே ஆசிரியர்கள் அந்த மாணவர்களை அழைத்து வந்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மது போதையில் அவர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டிருந்தது.
உடனே அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்த ஆசிரியர்கள் பெற்றோர்களிடமும் அந்த வீடியோவை போட்டு காட்டி பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விரைவில் பொது தேர்வு நடக்க உள்ளது என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.
இது போல மாணவர்கள் சிறுவர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வந்தால் அவர்களிடம் மது விற்பனை செய்வதை டாஸ்மாக் கடை ஊழியர்கள் நிறுத்த வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications