ஓ.பி.எஸ். என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை: புகழேந்தி விமர்சனம்
மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை என்று கர்நாடக அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் மதுரை மேலூரில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் புதிய அமைப்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி தலைமை தாங்கினார். இதில் நாஞ்சில் சம்பத், கர்நாடகா அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய புகழேந்தி, டிடிவி தினகரன் தலைமையில் கட்சியும், ஆட்சியும் சென்று விடும் என்ற பயத்தில் தான் அவரை கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது ஏன் புகைப்படத்தை வெளியிட வில்லை என கேட்கிறார்கள். ஜெயலலிதா சிகிக்சைக்காக அப்பல்லோவில் இருந்த போதே 300 பேர் உயிரிழந்தாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் என்ற வண்டியில் டயர், டியூப் என கீழே விழாத பகுதியே இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications