பாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி!
சென்னை: பாஜக கூட்டணியில் 3வது கட்சியாக புதிய நீதிக் கட்சி நுழைந்துள்ளது.
ஏற்கனவே மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில் 3வது கட்சியாக புதிய நீதிக் கட்சி என்ட்ரி கொடுத்துள்ளது.
மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சியுடன் பேசி கூட்டணியில் அவர்களை உறுதிப்படுத்தி விட்ட பாஜக நேற்று புதிய நீதிக் கட்சியுடன் பேச்சு நடத்தியது. பாஜக தலைமை அலுவலகமான கமலாலாயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. பாஜக தரப்பில் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இது முதல் கட்ட சந்திப்பு என்று தெரிவித்த ஏசி சண்முகம், பேச்சுவார்த்தை குறித்தும் திருப்தி தெரிவித்து விட்டுச் சென்றார்.
பாஜகவின் 'டிரெய்லர்' ஓ.கே.. ஆனால் 'மெயின் பிக்சரை' காணோமே....!!












Click it and Unblock the Notifications