புதிய தலைமுறை டிவி மீது வெடிகுண்டுகள் வீச்சு: மதுரையில் ஒருவர் சரண்- சென்னையில் 6 பேர் கைது
சென்னை: சென்னையில் உள்ள பதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை சென்னை கமிஷனர் ஜார்ஜ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். அலுவலக வாசலில் வீசப்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறின. நல்ல வேளையாக இந்த குண்டுவெடிப்பில் யாரும் காயம் அடையவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் இந்து இளைஞர் சேனா அமைப்பின் மாநில தலைவர் ஜெயம் பாண்டியன் சரண் அடைந்துள்ளார். தங்கள் அமைப்பினர் தான் புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டுவீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சென்னையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜெயம் பாண்டியனின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அவர்கள் 6 பேரும் செயல்பட்டதாக கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சம்பவம்:
இச்சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், " சென்னை கோயம்பேட்டில் ஜெயம் டிராவல்ஸ் நடத்தி வருபவர் சரணைடைந்த ஜெயம் பாண்டியன். இவர் இந்து சேனா அமைப்பினைச் சேர்ந்தவர். இந்து இளைஞர்கள் சேனாவிற்காக இத்திட்டத்தினை ஜெயம் பாண்டியன் வகுத்துள்ளார்.
இவரிடம் டிராவல்ஸில் வேலை பார்த்தவர்களைக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அணுகுண்டு வகை பட்டாசுகளை டிபன் பாக்சினுள் வைத்து வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இத்தாக்குதல் குறித்த விசாரணைக்கு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மதுரை, வேலூர், காஞ்சிபுரம் அனுப்பப்பட்டுள்ளனர்" என்று கூறினார்,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications