கட்சிகள் தனித்து போட்டியிட்டால் அதிமுக - 119: திமுக - 115: புதிய தலைமுறை சர்வே !
சென்னை: அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டால் அதிமுகவிற்கு 119 தொகுதிகளும் திமுகவிற்கு 115 தொகுதிகளும் கிடைக்கும் என்று ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளதாக புதிய தலைமுறை நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மக்களின் மனநிலை என்ன என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஏபிடி நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

சென்னை மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 5018 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டால் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கக்கூடும் ? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
அதிமுக - 119
திமுக - 115


Click it and Unblock the Notifications
